முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீட்டிப்பு

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      விளையாட்டு
Dravid 2023 07 30

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீட்டித்துள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

2021-ல் நியமனம்...

கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெளியேறிய பிறகு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அதன்பின், அவரது பயிற்சியின்கீழ் இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

லட்சுமணன் நியமனம்...

இதற்கிடையே 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டார்.

பி.சி.சி.ஐ. கூட்டம்... 

மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை தொடர ராகுல் டிராவிட் விருப்பம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியது. டிராவிட் தொடராத பட்சத்தில் தலைமை பயிற்சியாளர் பதவியை விவிஎஸ் லட்சுமணன் ஏற்பார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியது. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய முடிவாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 

தென்னாப்பிரிக்கா...

மேலும் டிராவிட் உள்ளிட்ட அவரது குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரின் பதவிக்காலத்தையும் நீட்டித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், தேசிய கிரிக்கெட் அகாதெமியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மனும் தொடர்வார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியுடன் ராகுல் டிராவிட்டும் பயணிக்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து