முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      உலகம்
EarthQuake-2023-04-03

கொல்கத்தா, வங்கதேசத்தில் நேற்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்கத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

வங்கதேசத்தில் நிலநடுக்கமும், இந்தியாவில் நில அதிர்வும் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. எனினும், இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இறுதி அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கொல்கத்தா காவல்துறை, மாநகராட்சி ஆகியவற்றின் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், நில அதிர்வால் சேதம் ஏதும் இல்லை என கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து