Idhayam Matrimony

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் டெபாசிட் இழந்த நடிகர் பவன் கல்யாணின் கட்சி

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      இந்தியா
Pawan-Kalyan 2023-12-03

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருந்த பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்ட 8 தொகுதிகளிலுமே டெபாசிட்டை இழந்துள்ளது. 

தெலுங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமீதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த அம்மாநில சட்டசபை தேர்தலில் அதிர்ச்சிக்குரிய வகையில் காங்கிரசின் வெற்றியால் பின்னடைவை சந்தித்துள்ளது சந்திரசேகர ராவின் கட்சி. 

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி இந்த தெலுங்கானா தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தது. தெலுங்கானாவில் ஜன சேனா கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த 8 தொகுதிகளிலுமே ஜன சேனா கட்சி டெபாசிட் இழந்துள்ளது. ஆந்திராவின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் பவன் கல்யாணுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த தோல்வி பிரதிபலிக்குமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து