முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரங்கிமலை மெட்ரோ பார்க்கிங் நாளை வரை தற்காலிக மூடல்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
Metro-Parking 2023-12-03

Source: provided

சென்னை : பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதியில் மழைநீர் அதிகமாக தேங்கி உள்ள காரணத்தினால் வாகன நிறுத்துமிடம் நாளை 05-ம் தேதி (செவ்வாய்க்கிழமை)  காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. 

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தியுள்ள உரிமையாளர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உடனடியாக எடுத்து செல்லுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வாகனங்களை எடுத்து செல்லாத பட்சத்தில் வாகனத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பொறுப்பேற்காது.

பெய்து வரும் கனமழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதியில் அதிகமாக மழைநீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம்  மற்றும் நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து