முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க. : தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      இந்தியா
BJP 2023-11-05

Source: provided

புதுடெல்லி : 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கிறது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

 மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 9-ம் தேதி அறிவித்தது. 5 மாநிலங்களிலும் நவம்பர் 7 முதல் 30-ம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது. 

அதன்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளிலும், மிசோரமில் நவம்பர் 7, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25, தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 71.07 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில், கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. எஞ்சிய 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 7-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. நவம்பர் 17-ம் தேதி இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு கட்ட தேர்தல்களையும் சேர்த்து சத்தீஸ்கர் தேர்தலில் 76.31 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.  இந்த மாநிலத்தில் பா.ஜ.க. - காங்கிஸ் இடையே நேரடி போட்டி நிலவியது.

ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மிசோரம் தவிர்த்த நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று  விறுவிறுப்பாக நடைபெற்றது. 

இந்நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி, 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் பா.ஜ.க. 15 இடங்களில் வெற்றியடைந்து, மேலும் 40 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று, 27  இடங்களில் முன்னிலையில் இருந்தது. 

230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 77 தொகுதிகளில் வெற்றியும், 87 இடங்களில் முன்னிலையும் பெற்று இருந்தது. காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றியும், 47 இடங்களில் முன்னிலையும் பெற்று இருந்தது. 

199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தானில் பா.ஜ.க. 99 இடங்களில் வெற்றியடைந்து, 16 இடங்களில் முன்னிலை வகித்து வந்தது.  56 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 12 இடங்களில் முன்னிலையில் இருந்தது. 

119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்று, 23 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.  4 தொகுதிகளில் வெற்றியடைந்த பா.ஜ.க. 4 இடங்களில் முன்னிலையில் இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 17 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 18 hours ago
View all comments

வாசகர் கருத்து