முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 7 -ஆம் ஆண்டு நினைவு தினம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து அமைதி பேரணி - மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
Sellur-Raju 2023-12-06

Source: provided

மதுரை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து அமைதி பேரணி சென்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7 - ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பனகல்சாலையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு  கே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள ஜெயலலிதாவின் உருவசிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7 - ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜான்சிராணி பூங்காவில் துவங்கி மேலமாசி வீதி வழியாக சுமார் 1500 மீ தூரம் உள்ள மேற்கு - வடக்குமாசி சந்திப்பு வரையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆண்களும்,பெண்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.மேலும் அமைதி பேரணியின் போது தொண்டர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உறுதிமொழி எடுத்துகொண்டார். அதனைத் தொடர்ந்து  அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வினை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.துவக்கி வைத்தார்.

இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை, பா.குமார்,டாக்டர் சரவணன், பரவைராஜா, வி.பி.ஆர்.செல்வகுமார்,கு.திரவியம், சக்திமோகன், கணேஷ்பிரபு, எம்.எஸ்.கே.மல்லன், கே.ஜெயவேல், ஆர்.கே.ரமேஷ், எஸ்.டி.ஜெயபாலன், ஏ.பார்த்திபன், ஜெ.மாணிக்கம், சோலைராஜா, சுகந்திஅசோக், வக்கீல் தமிழ்செல்வன், ஏ.இந்திரா, விநாயகமூர்த்தி, மார்க்கெட் மார்நாடு, பி.ஆர்.சி.ஜெயராஜ், பி.ஆர்.சி.ஜெயபாலன், வக்கீல் அசோகன், எம்.ஜி.ராமச்சந்திரன்,தளபதி மாரியப்பன், சக்திவிநாயகர் பாண்டியன், ஜெயம்ஜெயபாண்டி, ரவிராஜ், எம்.எஸ்.செந்தில்குமார்,வி.கணேசன், கே.வி.கே.கண்ணன்,பைக்காராகருப்பசாமி, கலைச்செல்வன், விளாங்குடி சித்தன், கறிக்கடை முத்துகிருஷ்ணன் கவுன்சிலர்கள் ஏ.மாயத்தேவன், ரூபினிகுமார், முத்துமாரி ஜெயக்குமார்,பிரேமா டிமிட்டிராவ், கார்னர் பாஸ்கர், புதூர் அபுதாகீர், வக்கீல் புதூர் சந்திரன்,ராணி நல்லுச்சாமி,ஷோபியா பிச்சைமணி, நாகேந்திரன், எம்.ஏ.நாசர், நூர்முகமது, திடீர்நகர் பாலா, கே.கே.நகர் மணி,பூக்கடைமுருகன், பி.ஆர்.சி.திருமுருகன், ராமசீனிவாசன்,பைக்காரா செழியன், ராமசுப்பு, பாவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து