முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது : அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
Mano-Thangaraj 2023 04 01

Source: provided

சென்னை : இன்று முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சில பகுதிகளில் இன்னும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை உள்ளது.

இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'நிலைமை நன்கு சீரடைந்து விட்டது. இன்று முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது. எனவே, #NoPanicBuying - பொதுமக்கள் பதட்ட மனநிலையில் அதிக அளவில் பால் வாங்கி இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே, பால் தேவைப்படும் பிறருக்கும் பால் கிடைக்க வழிவகுக்கும். 

ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு உள்ளது. எனவே, ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக பால் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பல்வேறு விற்பனையாளர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், ஆவின் மற்றும் தனியார் பால் விற்பனையில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.  மேலும், இந்த இக்கட்டான சூழலில் மக்களின் நலனை கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து