முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் போட்டி குறித்து மேக்ஸ்வெல்

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      விளையாட்டு
ICC

Source: provided

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 4-வது சீசனில் ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் விளையாட உள்ளார். இந்நிலையில் என்னால் நடக்க முடியாத வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய கேரியரின் கடைசி போட்டி ஐபிஎல் தொடரில்தான் நடைபெறும் என்று கூறும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியது பின்வருமாறு'-

என்னால் நடக்க முடியாத வரை ஐபிஎல் தொடரில் நான் விளையாடுவேன். ஏனெனில் என்னுடைய கேரியர் முழுவதும் ஐபிஎல் நிறைய நல்ல மாற்றங்களை கொடுத்ததை நினைத்துப் பார்க்கிறேன். அதில் நான் சந்தித்த நபர்களும், பயிற்சியாளர்களும், சர்வதேச வீரர்களும் என்னுடைய கேரியரில் சிறந்து விளங்குவதற்கு எப்படி உதவினார்கள் என்பதை திரும்பிப் பார்க்கிறேன். வரும் காலங்களில் இன்னும் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகளில் எப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்" என்று கூறினார்.

----------------------------------------

ரோகித் அவசியம்: முகமது கைப்

அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடியது. இந்த தொடரில் இடம்பெறாத ரோகித் சர்மா அடுத்ததாக நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலும் ஓய்வெடுக்க உள்ளதால் 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் தெரிவித்தாவது., ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக இருப்பதை விட கேப்டனாக 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தேவை. நல்ல தலைமை பண்புகளை கொண்டுள்ள அவர் கண்டிப்பாக அத்தொடரில் இருக்க வேண்டும். குறிப்பாக 50 ஓவர் உலகக்கோப்பையில் அவர் கேப்டனாக அணியை முன்னின்று வழி நடத்தி தன்னுடைய பணியில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவருடைய அனுபவம் டி20 போட்டிகளுக்கும் தேவை. ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறந்த வேலையை செய்துள்ளார். எனவே டி20 போட்டிகளிலும் அவர் கண்டிப்பாக இந்திய அணிக்கு தேவை என்று கூறினார்.

______________

சுப்மன் கில்லை புகழ்ந்த லாரா

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா. இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 299 ஒருநாள் போட்டிகள் மற்றும் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள லாரா 131 போட்டிகளில் 11953 ரன்களை குவித்துள்ளார். மேலும் அதில் 34 சதங்களை விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தனிநபர் அதிகபட்ச ரன்கள் (400 ரன்கள்) அடித்த வீரராக இன்றளவும் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் தன்னுடைய இந்த 400 ரன்கள் சாதனையை இந்திய இளம் வீரரான சுப்மன் கில் முறியடிப்பார் என பிரைன் லாரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சுப்மன் கில்லால் என்னுடைய 2 சாதனைகளை முறியடிக்க முடியும். தற்போதுள்ள வீரர்களில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். உலக கோப்பையில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும் இதுவரை அவர் விளையாடி இருக்கும் விதத்தை பார்க்கும்போது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் இனிவரும் ஐ.சி.சி தொடர்களிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து