Idhayam Matrimony

திட்டமிட்டபடி இன்று டெல்லி நோக்கி பேரணி நடைபெறும் : விவசாயிகள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      இந்தியா
Farmers-2024-02-13

Source: provided

புதுடெல்லி : 4-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி டெல்லி நோக்கி இன்று பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகளுக்கான சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி, மின்கட்டண உயர்வு மற்றும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி புறப்பட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டைப் போல மீண்டும் டெல்லியில் பெரிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதை தடுக்க போலீசார் மாநில எல்லையிலேயே விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால், பஞ்சாப், அரியானா மாநில எல்லையான ஷம்பு உள்ளிட்ட பல்வேறு எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் நீண்ட வரிசையில் குவிந்தனர். 

அதே சமயம் விவசாயிகளை சமாதானப்படுத்த கடந்த 8, 12, 15-ம் தேதிகளில் 3 கட்டமாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை தொடர்ந்து கடந்த 18-ம் தேதி நடந்த 4-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் திட்டமிட்டபடி டெல்லியை நோக்கி இன்று பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். பருப்பு, சோளம், பருத்தி பயிர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. மத்திய அரசின் பரிந்துரையை விவசாயிகள் ஏற்காமல் நிராகரித்ததால் திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறுகிறது. 

இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி சர்வான் சிங் கூறுகையில், 

 

அரியானாவில் உள்ள தற்போதைய சூழல் காஷ்மீரைப் போன்று உள்ளது. நாங்கள் டெல்லிக்குள் நுழையக் கூடாது என ஒன்றிய அரசு நினைக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாவிடில் எங்களை போராட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து