முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      சினிமா
Jayalakshmi 2023-02-20

Source: provided

சென்னை : மோசடி வழக்கில் நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி போலீசாரால் கைது  செய்யப்பட்டார்.

கடந்த 2022ம் ஆண்டு 'சினேகம் பவுண்டேஷன்' பெயரை பயன்படுத்தி நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக இருவரும் மாறி மாறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

நேற்று காலை திருமங்கலம் போலீசார் அண்ணாநகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் நடிகை ஜெயலட்சுமியை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து