முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு:ஏ.வி.ராஜுக்கு நோட்டீஸ்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2024      தமிழகம்
3-sha

Source: provided

சென்னை:கூவத்தூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பிரச்னைக்கு திரைப் பிரபலங்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து, கீழ்த்தரமான, கேவலமான மனிதர்கள் மீது தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே முன்னாள் அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜு, தான் த்ரிஷாவை பற்றி பேசவில்லை எனவும், தன்னை தவறாக சித்தரித்து காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் எனவும், த்ரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு அதிமுகவின் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,  நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வலியுறுத்தப்பட்டது.  மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஏ.வி.ராஜுக்கு அதிமுக வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை நோட்டீஸ் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து