முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மூன்று பேருக்கு கூடுதல் பொறுப்பு

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை:தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில் இன்று மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாநில உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜியான மகேஷிற்கு கூடுதல் பொறுப்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு டிஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சிறப்பு பிரிவு எஸ்பி அருளரசுவிற்கு கூடுதல் பொறுப்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. தீவிரவாத தடுப்பு பிரிவு கோவை எஸ்பியான சசிமோகனுக்கு மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து