முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் துவாரகாதீஷர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      இந்தியா
Modi 2023-02-25

Source: provided

போர்பந்தர் : பிரதமர் மோடி நேற்று தமது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டார்.  நேற்று காலை ஓகா அருகே உள்ள பேட் துவாரகா தீவுக்கு சென்ற பிரதமர் மோடி கிருஷ்ணர் கோவில் பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். 

இதனைத் தொடர்ந்து துவாரகையில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்கும் பிரதமர் மோடி சென்று வழிபாடு நடத்தினார்.  இதையடுத்து, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தி ற்கு சென்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

நீருக்கடியில், ஆழ்கடலுக்குச் சென்ற பிரதமர் மோடி, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தில்  பிரார்த்தனை செய்தார். இந்த நகரம் கடவுள் கிருஷ்ணருடன் நெருங்கிய தொடர்புடைய புராதன நகரமாக இருந்தது. 

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், 

நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகிமை மற்றும் நித்திய பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார்.

உலகெங்கிலும் பழமையான நகரங்கள் பல நீருக்கடியில் மூழ்கியுள்ளன. இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு கூறுகிறது. இதில் துவாரகா நகரம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்த நகரம், இந்தியாவில் உள்ள ஏழு புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து