முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      இந்தியா
Dog

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடம், மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொது இடங்களில் தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் இதுதொடர்பான வழக்கில் கூடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் அமர்வு ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி தானாகவே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி டெல்லிக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தும் வகையில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநில தலைமை செயலாளர்கள் தவிர மற்ற மாநில தலைமை செயலாளர்கள் அனைவரையும் கடந்த திங்கட்கிழமை நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, அனைவரும் ஆஜராகினர். அப்போது, தெருநாய்களுக்கு உணவளிக்க ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் உள்ளாட்சி அமைப்புகள் தனியாக ஒரு இடம் ஒதுக்கவில்லை என்பதற்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

இதுமட்டுமல்லாமல் அரசு அலுவலக வளாகங்களிலும், பொதுத்துறை நிறுவன அலுவலக வளாகங்களிலும் ஊழியர்கள் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மக்கள் தினந்தோறும் அவதிப்படும் தெருநாய் பிரச்சினைக்கு இதுமட்டும் தீர்வு அல்ல. தெருநாய் பிரச்சினை தொடர்பாக 7-ம் தேதி (நேற்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட் கூடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின்போது, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடம், மருத்துவமனை, ரயில் நிலையங்களில் தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும். பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். 

விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள் 2023ன்படி, இத்தகைய வளாகங்களில் இருக்கும் தெருநாய்களைப் பிடித்து அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும். மேலும், அவற்றுக்கு கருத்தடை செய்ய வேண்டும். அதன் பிறகு அவற்றை நியமிக்கப்பட்ட தங்குமிடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களை அதே இடத்தில் விடக்கூடாது. அவ்வாறு விடுவது, தீர்ப்பின் நோக்கத்தையே சீர்குலைக்கும்.

இந்த உத்தரவுகளை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் 8 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரேதச அரசுகள் அடுத்த விசாரணை தேதிக்கு முன்பாக பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில், எந்த ஒரு மெத்தனமும் தீவிரமாகக் கருதப்படும். தேசிய நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து தெரு நாய்கள் அகற்றப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். தவறுகளுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து