Idhayam Matrimony

கைகளில் வலி ஏற்பட்டு சிலம்பம் சுற்ற முடியாததால் மதுரை மாணவி விபரீத முடிவு

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

மதுரை : கைகளில் வலி ஏற்பட்டு சிலம்பம் சுற்ற முடியாததால் வருத்தம் அளிக்கிறது என்று சிலம்பம் மாணவி விபரீத முடிவை எடுத்தார்.

மதுரை சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் தானியலட்சுமி என்ற மகாலட்சுமி (16 வயது). மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர், சிறுவயதிலேயே சிலம்பம் பழகி போட்டிகளில் பங்கேற்றார். மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்று பல்வேறு பரிசுகளை பெற்று சாதித்தவர்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக தானியலட்சுமிக்கு கைகளில் வலி இருந்துள்ளது. இதனால், சிலம்பம் சுற்ற முடியாமலும், பள்ளிக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கும் சில நாட்கள் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர், வீட்டில் இருந்தபடி மருந்துகள் எடுத்து வந்தார். கைகளில் வலியால் அவதிப்பட்டு வந்த அவர், சிலம்பம் விளையாட முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு திடீரென தூக்குப்போட்டு தானியலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தவலறிந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராமர் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து