Idhayam Matrimony

புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்டோர் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் புஸ்சி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.

அதில், திருச்சியில் செப்டம்பர் 13-ந்தேதி த.வெ.க. பிரசார கூட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்க சென்றபோது, அங்குள்ள கோவிலில் வழிபாடு செய்தேன். அப்போது, கூட்டம் கூடிவிட்டது. இது வேண்டுமென்றே செய்யவில்லை. கோவிலுக்கு அருகே வாகனத்தை நிறுத்துவது ஒன்றும் குற்றம் இல்லை'' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தார். பின்னர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரிப்பதால், அவர் முன்பு மனுவை விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரை செய்தார். இந்தநிலையில், இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார். அதுவரை புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாக உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து