Idhayam Matrimony

வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      இந்தியா
Nirmala-Seetharaman 2023-04-27

Source: provided

மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வணிக நகரமான மும்பையில் நேற்று முன்தினம் ஸ்டேட் வங்கியின் 12-வது பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கிகளின் நிலை குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர், “நாட்டிற்கு பெரிய அளவிலான, உலகத்தரத்திலான வங்கிகள் தேவை. இதற்காக ரிசர்வ் வங்கியும் மற்ற பிற வணிக வங்கிகளும் சேர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றன” என்றார்.

மேலும் தொழில்துறைக்கு கடன் ஓட்டத்தை மேலும் விரிவுபடுத்த வங்கிகளை கேட்டுக்கொண்டார். ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் ஏற்பட்டுள்ள தேவை, முதலீட்டை ஊக்குவித்து ‘நல்ல வட்டச் சுழற்சி’யை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

மேலும் அவர் வங்கி பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் உள்ளூரின் வட்டார மொழியை கற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். அவர் கூறுகையில், “ஒரு கிளையில் பணியமர்த்தப்படும் ஒவ்வொரு ஊழியரும் தனது வாடிக்கையாளரைப் புரிந்து கொள்வதற்கு, உள்ளூர் மொழியை பேசுவதையும் உறுதிசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் அந்த வங்கியின் கிளை மானேஜராவது வட்டார மொழி பேச வேண்டும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து