எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி : விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்ட மிதக்கும் பாலம் இடிந்து விழுந்து கடல் அலையில் அடித்து செல்லப்பட்டது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்.கே.கடற்கரையில் ரூ.1.60 கோடியில் மிதக்கும் பாலம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. ரூ.1.60 கோடி செலவில் ஆலாலா எனும் மிதக்கும் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த மிதக்கும் பாலத்தை ராஜ்யசபா எம்.பி ஒய்.வி.சுப்பாரெட்டி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் நேற்று முன்தினம் காலை திறந்து வைத்தனர். மிதக்கும் பாலத்தை சுப்பா ரெட்டி திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
சுற்றுலா வளர்ச்சிக்காக இந்த மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் பிரபலம் அடையும். மேலும் இன்று(நேற்று) முதல் மிதக்கும் பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
இந்த நிலையில் பாலம் திறந்து வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிக வேகத்தில் பலமான காற்று வீசியது. இதில் பெரிய அலைகள் வந்து கடற்கரையை தாக்கியதால் அரிப்பு ஏற்பட்டது. இதனால் திறந்து வைக்கப்பட்ட சில மணி நேரத்தில் மிதக்கும் பாலம் இடிந்து விழுந்து கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டது.
மிதக்கும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பலான பிரஹரியும் சேதம் அடைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |