முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகர பஸ்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
Bus

Source: provided

சென்னை : சென்னை மாநகர பஸ்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகமானது. இதை அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை மாநகரப்போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய (பிஎஸ்-VI) பஸ் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தனர். மேலும் டெபிட் கார்டு, யு.பி.ஐ. மூலம் பயணிகள் டிக்கெட் பெற வசதியாக மின்னணு டிக்கெட் இயந்திரத்தையும் நடத்துநர்களுக்கு வழங்கினர்.

யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பஸ்களில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பஸ்களில் கொண்டு வர தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், பஸ்களில் நடத்துநர்கள் யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை அமைச்சர்கள் நடத்துநர்களுக்கு வழங்கினர். தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. மேலும், இக்கருவி மூலம் கார்டு மற்றும் யு.பி.ஐ., க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து