முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி கிரிக்கெட்டில் மட்டும் கவனம்: அரசியலுக்கு காம்பீர் 'குட்பை'

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

புதுடெல்லி : கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவுள்ளதால் அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும்,  பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிரிக்கெட் தொடர்.... 

தற்போது மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், வேட்பாளர்கள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசியலிலிருந்து விலகுவதாக பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; “வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தும் வகையில்,  எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன். மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

கிழக்கு டெல்லியில்...

கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி.யாக உள்ளவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.  இவர், மார்ச் 2019-ல் பாஜகவில் இணைந்தார்.  அதன்பின் டெல்லியில் பாஜகவின் முக்கிய முகமாக மாறினார்.  தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவை எம்.பி.யானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து