முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்டிகர் மாநகராட்சி: மூத்த துணை மேயர் மறுதேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      இந்தியா
BJP 2023 04 10

Source: provided

சண்டிகர் : சண்டிகர் மாநகராட்சி மூத்த துணை மேயர் பதவிக்கான மறுதேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 

சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். 

இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஆம் ஆத்மி கட்சியின் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு எண்ணிக்கையின் போது முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. 

இதையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவித்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார். 

அதன்பின் மேயர் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோங்கர் தோற்கடிக்கப்பட்டார். ஆம் ஆத்மி சார்பில் நிறுத்தப்பட்ட குமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார். 

சண்டிகார் மாநகராட்சியில் மூத்த துணை மேயர் பதவிக்கான மறுதேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. சார்பில் குல்ஜீத் சிங் சந்துவும், காங்கிரஸ் சார்பில் குர்பிரீத் காபி போட்டியிட்டனர். இந்நிலையில், 35 உறுப்பினர்களை கொண்ட மாநகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் குர்ப்ரீத் காபி 16 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக பா.ஜ.க.வில் 17 கவுன்சிலர்கள் இருந்தனர். ஆனால் கடந்த 19-ம் தேதி 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் தற்போது ஆம் ஆத்மிக்கு 10 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 7  உறுப்பினர்களும் உள்ளனர். ஷிரோமணி அகாளி தளத்திற்கு ஒரு கவுன்சிலர் இடம் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து