முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரை வேடந்தாங்கல் பறவை என விமர்சிப்பதா? முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      தமிழகம்
Nirmala-Seetharaman 2023-04-06

ஓசூர், வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருவதுபோல பிரதமர் மோடி சீசன் காலத்தில் மட்டும் தமிழகத்திற்கு  வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அந்த வார்த்தையை பயன்படுத்துவதே தவறு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓசூரில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்னும் 2 நாட்களில் புதிய வருடம் பிறக்கிறது. மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும். 

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரியில் தொழில் வளர்ச்சி பெருகி உள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது 2.75 லட்சம் குடும்பத்திற்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் 2.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருவதுபோல பிரதமர் மோடி சீசன் காலத்தில் மட்டும் தமிழகத்திற்கு  வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அந்த வார்த்தையை பயன்படுத்துவதே தவறு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து