முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாரம் முடியும் நாளான 17-ம் தேதி மாலை 5 மணிக்கு பதில் மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம்: நேரத்தை நீடித்து தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      தமிழகம்
Satyaprata-Saku

சென்னை, தேர்தல் பிரசாரம் முடியும் வரும் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு பதில் மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

4 முனைப்போட்டி...

தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.  இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.  இதனால்,  நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. 

கூடுதலாக அவகாசம்... 

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 17ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரம் செய்வதற்கான கடைசி நாளான்று ஒரு மணி நேரம் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாக்களிக்க முடியும்...

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது., “தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.  மேலும் 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.  வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.  பூத் ஸ்லிப் இல்லாதவர்களுக்கும் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஒரு மணி நேரம்... 

வழக்கமாக இறுதி நாளில் மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில் இந்த முறை கோடை வெயிலை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. அதன்படி 17ம் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம். இதையடுத்து, தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் விதியை மீறி சில அரசியல் தலைவர்கள் பிரசாரம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர்கள் மீதான புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் இரவு 10 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது.

புகார் அளிக்கலாம்...

தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். 19-ம் தேதி விடுமுறை இல்லை என தெரிந்தால் 18-ந் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம். 17-ம் தேதி மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய உள்ளது. 

பூத் சிலிப் வழங்கும்... 

பூத் சிலிப் வழங்கும் பணி 92.80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்று மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணி நிறைவடையும். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் இன்று ஒருநாள் தபால் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தபால் வாக்குக்களை தபால் மூலமாக அனுப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து