முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 15-ல் ராஜினாமா: சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      உலகம்
Singapore-PM-Lee-Hsien-Loon-2024-04-16

சிங்கப்பூர், சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். 

சமீபகாலமாக இந்த கட்சியின் அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன்காரணமாக 2 எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 

இந்த நிலையில் பிரதமர் லீ சியென்னும் அடுத்த மாதம் (மே) 15-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தான் பதவி விலகும் அதே நாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் கூறி உள்ளார்.

இது குறித்து வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  இதே நாளில் துணை பிரதமரான லாரன்ஸ் வாங் அடுத்த புதிய பிரதமராக பதவியேற்றுக் கொள்வார்.எந்த நாட்டிலும் தலைமை மாற்றம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க தருணமாகும். 

லாரன்ஸ் மற்றும் 4ஜி ( நான்காவது தலைமுறை) குழுவானது மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு கடுமையாக உழைத்துள்ளனர். 4 ஜி குழுவானது சிங்கப்பூரை சிறப்பாக செயல்பட வைப்பதற்கும், முன்னேற்றுவதற்கும் உறுதி பூண்டுள்ளது. லாரன்ஸ் மற்றும் அவரது குழுவிற்கு மக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து