முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணியின் முதல் குழு 25-ம் தேதி அமெரிக்கா பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      விளையாட்டு
Indian-team 2023-10-30

Source: provided

புதுடெல்லி  டி-20 லகக் கோப்பை தொடரில் பங்கேற்க வரும் 25-ம் தேதி அமெரிக்கா செல்கிறது இந்திய கிரிக்கெட் அணியின் முதல் குழு. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஜூன் 5-ந் தேதி அயர்லாந்தை நியூயார்க்கில் சந்திக்கிறது.

20 அணிகள் பங்கேற்பு...

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் (ஜூன்) 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ'பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஜூன் 5-ந் தேதி அயர்லாந்தை நியூயார்க்கில் சந்திக்கிறது. முன்னதாக இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஜூன் 1-ந் தேதி வங்காளதேசத்துடன் ஆடுகிறது. உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ஒரு பகுதியினர் வருகிற 21-ந் தேதி புறப்பட்டு செல்வார்கள் என்று முதலில் கூறப்பட்டது.

நியூயார்க் நகருக்கு... 

தற்போது, ஐ.பி.எல். போட்டியில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறாத அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணி வீரர்கள் வருகிற 25-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு செல்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த முதலாவது குழுவில் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல் மற்றும் அணியின் பயிற்சி உதவியாளர்கள் செல்கிறார்கள். இந்திய அணியின் 2-வது குழுவினர், ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு வருகிற 27-ந் தேதி புறப்பட்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து