Idhayam Matrimony

பா.ஜ.க.வுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்? - அகிலேஷ் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Akhilesh yadav

Source: provided

லக்னோ : உ.பி.யில் இளைஞர் ஒருவர் பா.ஜனதா வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்ததாக அகிலேஷ் யாதவ் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு 8 முறை வாக்குப்பதிவு செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதே போல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்திலும் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பல்வேறு எதிர்கட்சியினர் இந்த வீடியோவை பகிர்ந்து பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து