முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன்: நெதன்யாகுவிற்கு எதிராக அமைச்சர் திடீர் போர்க்கொடி

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      உலகம்
Benjamin 2023 07-23

Source: provided

டெல்அவிவ் : அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என்று காசா மீதான போர் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமைச்சர் பென்னி காண்ட்ஸ் நெதன்யாகுவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். 

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 7 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு இஸ்ரேலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்  பென்னி காண்ட்ஸ் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காசாவின் ஹமாசுக்கு எதிரான போர் திட்டத்திற்கு பிரதமர் நெதன்யாகு வகுத்த இறுதி எச்சரிக்கை இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ள பென்னி காண்ட்ஸ், அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் போருக்குப் பிந்தைய திட்டத்தை உருவாக்க பிரதமர் நெதன்யாகுவுக்கு ஜூன் 8-ம் தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். இதற்கிடையே காண்ட்சின் இறுதி எச்சரிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து