முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட தி.மு.க. : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : அ.தி.மு.க. கொண்டு வந்த தடுப்பணை திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 17-ம் தேதி மறைந்த முன்னாள் மேயர் தா.மலரவன் வீட்டிற்கு நேற்று சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டி வருவதாகவும், இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

கர்நாடக அரசும் மேகதாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி இருப்பதாகவும், இதே போல் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும்.

தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்ததாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டியதாகவும், அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டதாக குற்றம் சாட்டினார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்குகளை திமுக அரசு திட்டமிட்டு நீக்கி உள்ளதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என்றார். மேலும் அவர், தமிழக மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 இடங்களில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து