எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மழையால் மின் தேவை குறைந்திருந்தாலும் இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் போது மின் தேவையை சமாளிக்க, தமிழ்நாடு மின்வாரியம் 3,286 மில்லியன் யூனிட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து தினசரி மின்தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது. இம்மாதம் 2-ம் தேதி தமிழகத்தின் தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, “இந்த ஆண்டு கோடை வெயிலின் போது தினசரி மின் தேவை மிக அதிகபட்சமாக 20,830 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. மின்வாரியம் மின் தேவையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, சொந்தத் தேவை, மத்திய தொகுப்புகளில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததோடு, தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.
இதன்படி, குறைந்தகால ஒப்பந்த அடிப்படையில் ரூ.7,755 கோடி மதிப்பில் 3,286 மில்லியன் யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தினசரி மின்தேவை கணிசமாக குறைந்துள்ளது. எனினும், குறைந்தபட்ச மின் தேவையை சமாளிக்க காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


