முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.: அமெரிக்காவில் 2-வது இடம் பிடித்த இந்தியர்

புதன்கிழமை, 22 மே 2024      உலகம்
America 2024-05-22

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் இதழ், வெளியிட்ட, 2023ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய தலைமை நிர்வாக அதிகாரிகள்( சிஇஓ) பட்டியலில் இந்தியாவில் பிறந்த நிகேஷ் அரோரா (56) 2வது இடம் பிடித்துள்ளார்.

பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் சிஇஓ.,வான இவருக்கு கடந்த ஆண்டு 15,14,30,000 டாலர் சம்பளம் பெற்றுள்ளார். இதன் மூலம் மெட்டா நிறுவனத்தின் மார்க் சக்கர்பெர்க், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோரை நிகேஷ் அரோரா முந்தி உள்ளார்.

நிகேஷ் அரோரா 1968 பிப்.,9 ல் உ.பி., மாநிலம் காஸியாபாத்தில் பிறந்தவர். அவரது தந்தை இந்திய விமானப்படையில் பணியாற்றினார். விமானப்படை பள்ளியில் படித்த இவர், 1989ம் ஆண்டு வாரணாசி ஐஐடி(பிஎச்யு)வில் எலெக்டரிக்கல் இன்ஜீனியரிங் முடித்தார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள வடகிழக்கு பல்கலையில் எம்பிஏ முடித்தார். 1992 ல் பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் பணியை துவக்கினார். அங்கு நிதி மற்றும் தொழில்துறை நிர்வாகத்தை கவனித்தார். மேலும் அந்த நிறுவனத்தின் துணை அதிபர் ஆகவும் இருந்தார். 2000ம் ஆண்டு தேவுட்ஸ்சே டெலிகாம் நிறுவனத்தின் துணை நிறுவனமாக டி மோசன் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். பிறகு டி சர்வதேச பிரிவின் தலைமை வணிகப்பிரிவு அதிகாரியாக பணியாற்றினார்.

2004 ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்த நிகேஷ் அரோரா, அந்த நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவு தலைவர், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவின் துணை தலைவர், தலைமை வணிக அதிகாரி என 10 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார்.2014 ல் ஜப்பானின் சாப்ட் பேங்கில் இணைந்தார். அந்த நிறுவனத்தின் இணையப்பிரிவு மற்றும் மீடியாத்துறை சிஇஓ ஆக பணியாற்றினார். 2016 ல் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். 2018 ம் ஆண்டு பாலோ ஆல்டோ நிறுவனத்தில் இணைந்த அவர், சிஇஓ மற்றும் தலைவராக தற்போது இருந்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து