முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
Kibini 2023-08-24

பெங்களூரு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. 

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். அணையில் தற்போது 81.45 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1971 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. 

இதே போல் கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடி ஆகும். தற்போது அணையில் 58.29 அடிக்கு தண்ணீர் உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4356 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து