முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய செய்தி தொடர்பாளர் தகவல்

சனிக்கிழமை, 25 மே 2024      உலகம்
Putin 2023-03-02

மாஸ்கோ, போரை நிறைவு செய்வதற்காக ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த உக்ரைன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யா எதிர்பார்க்காத அளவுக்கு உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், '

உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ள, அதிபர் புடின் தயாரக உள்ளார் என 4 ரஷ்ய அதிகாரிகள் கூறினர். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதை சில ஐரோப்பிய நாடுகள் தடுப்பதாக புடின் கருதுகிறார் என தெரிவித்துள்ளது.

இது குறித்து, நிருபர்கள் கேள்விக்கு ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ கூறுகையில், 

 போரை நிறைவு செய்வதற்காக உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது. போரை நாங்கள் விரும்பவில்லை என பதில் அளித்தார். ரஷ்யா உடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இதுவரை உக்ரைன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து