Idhayam Matrimony

தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
sun-2023-05-01

Source: provided

சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. பாலாமோர், ஆணைக்கிடங்கு, தக்கலையில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் மே 31ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பநிலை உயரக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மே 29ம் வரை மணிக்கு 45 முதல் 65 கி.மீ., வேகம் வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும். இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து