முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ரஜினி மறுப்பு

புதன்கிழமை, 29 மே 2024      சினிமா
Rajini

Source: provided

சென்னை : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார். 

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் வேட்டையன் படப்பிடிப்பு முடிந்தவுடன் 10 நாள் ஓய்விற்காக அபுதாபி சென்றிருந்தார். பின்னர், ஓய்வை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பிய அவர் கூலி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில், ரஜினிகாந்த் இமயமலை செல்ல உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு செல்வதற்காக போயஸ் கார்டனில் இருந்து விமான நிலையம் புறப்பட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 

ஒவ்வொரு ஆண்டும் இமயமலை செல்கிறேன், இந்த வருடமும் அங்கு செல்வது மகிழ்ச்சி. அங்கு பத்ரிநாத், கேதார்நாத் செல்ல உள்ளேன் என்றார். அப்பொழுது அவரிடம் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வருவாரா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த ரஜினி,  அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம் என தெரிவித்தார். மேலும், இசையா? பாடலா? என்ற கேள்விக்கு செய்தியாளரிடம் அண்ணா, நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு சென்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து