முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வில் நீடிக்கும் தாமதம்

புதன்கிழமை, 29 மே 2024      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : தலைமை பயிற்சியாளர் குறித்து இதுவரை கவுதம் கம்பீர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார்  என பி.சி.சி.ஐ. அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பி.சி.சி.ஐ. அழைப்பு...

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.  எனவே, இந்திய  கிரிக்கெட்டின் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  தொடங்கியுள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 13-ம் தேதி பிசிசிஐ அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு மே 27ம் தேதியும் முடிவடைந்தது.

போலி விண்ணப்பங்கள்...

இதன் மூலம் பிசிசிஐ 3,000 -க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.டோனிபோன்ற பிரபலங்களின் பெயரில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. கூகுள் ஃபார்ம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், அதிகளவில் போலி விண்ணப்பங்கள் அனுப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலனவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலமானவவர்கள் பெயர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் காம்பீர் மவுனம்...

இந்த நிலையில் பிசிசிஐ விதித்த காலக்கெடு நிறைவடைந்த நிலையில் அடுத்த பயிற்சியாளருக்கான வாய்ப்பு கவுதம் காம்பீருக்குத்தான் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக கவுதம் காம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அவை உறுதி செய்யப்படவில்லை. ஐபிஎல் போட்டியில் கவுதம் காம்பீர் பயிற்சி அளித்த அணியான கொல்கத்தா அணி கோப்பையை வென்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக  கவுதம் காம்பீருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என பேசப்படும் நிலையில் இது குறித்து கம்பீர் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதிகாரப்பூர்வ தகவல்...

இந்திய தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பம் குறித்து பிசிசிஐ மற்றும் காம்பீர் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. காம்பீர் தலைமைப் பயிற்சியாளாருக்கு விண்ணப்பித்தாரா எனவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அதே நேரத்தில் எந்த வெளிநாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கைவில்லை என தெரிகிறது. மேலும் கொல்கத்தா அணியில் அடுத்த பத்து வருடத்திற்கு தொடர வேண்டும் என ஷாருக் கான் வலியுறுத்தியுள்ளதாகவும் அதனால் கம்பீர் மௌனம் காக்கிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து