முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்பு

வியாழக்கிழமை, 6 ஜூன் 2024      இந்தியா      அரசியல்
Shivraj-Singh-Chauhan 2023-

புது டெல்லி, பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பாராளுமன்ற மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றுள்ளது. இண்டியா கூட்டணிக்கு 234 தொகுதிகள் கிடைத்துள்ளன.

இதற்கிடையில் மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் 11,16,460 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். 

இந்த நிலையில், பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2019-ம் ஆண்டு முதல் பா.ஜ.க.வின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பா.ஜ.க. தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் புதிய தலைவர் தேர்வு செய்வதில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் 29 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதற்கு கடுமையாக உழைத்தவர் சிவராஜ் சிங் சவுகான். பா.ஜ.க.வின் கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். 2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக் காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து