முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நார்வே செஸ் போட்டி: பிரக்ஞானந்தா போராட்டம்

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2024      விளையாட்டு
Pragnananda 2023-08-23

Source: provided

ஓஸ்லோ : நார்வே செஸ் போட்டியின் 9-வது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, கோனெரு ஹம்பி, வைஷாலி ஆகியோர் தோல்வியடைந்தனர். கிளாசிக்கல் கேமில் தற்போது 3-ம் இடத்தில் இருக்கும் பிரக்ஞானந்தா கார்ல்சன், ஹிகரு நகமுரா வென்றால் முதலிடம் வர வாய்ப்புள்ளது.

நகமுரா தோல்வி...

9-வது சுற்று முடிவில் கார்ல்சென் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஹிகரு நகமுரா 14.5 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் பிரக்ஞானந்தா 13 புள்ளிகளுடனும் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள். ஹிகரு நகமுரா தோல்வியுற்றதால் கார்ல்சென் தனது முதல் இடத்தினை தக்கவைத்துள்ளார். கடைசி சுற்றில் கார்ல்சென் தோல்வியுற்று, கிளாசிக்கல் கேமில் ஹிகரு நகமுரா வென்றால் முதலிடம் வர வாய்ப்பிருக்கிறது.

வாய்ப்பே இல்லை...

பிரக்ஞானந்தா முதலிடம் பிடிக்க கார்ல்சென், ஹிகரு நகமுரா இருவரும் தோற்க இவர் கிளாசிக்கல் கேமில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரிவில் கோனெரு ஹம்பி, வைஷாலி ஆகியோரும் தோல்வியடைந்தனர். மகளிர் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி முதலிடம் பிடிக்க வாய்ப்பே இல்லை. வென்ஜூன், டிங்ஜி, முஸிஷூக் முதலிடத்துக்கான போட்டியில் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து