எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : பீகார் சிறையில் தற்கொலைக்கு முயன்ற சீன கைதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சீனாவின் ஷாங்டாங்க் மாகாணத்தை சேர்ந்தவர் லி ஜியக்யூ. இவர் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். இதனிடையே, பீகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பிரமபுரா நகரம் லட்சுமி சவுக் பகுதியில் லி ஜியக்யூவை கடந்த 6-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி லி ஜியக்யூ இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் சீன வரைபடம், செல்போன், சீனா, இந்தியா, நேபாள ரூபாய் நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட லி ஜியக்யூ முசாபர்நகர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அங்கு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறையில் உள்ள கழிவறையில் உடைந்த கண் கண்ணாடியை கொண்டு லி ஜியக்யூ தனது உடலின் முக்கிய உறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில், படுகாயமடைந்த லி ஜியக்யூ மயங்கியுள்ளார். பின்னர், அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லி ஜியக்யூ நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


