முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை தொடர்: ஹாட்ரிக் வெற்று பெறும் ஆர்வத்தில் இந்திய அணி அமெரிக்காவுடன் இன்று மோதல்

புதன்கிழமை, 12 ஜூன் 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 04 03

Source: provided

வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முடிவு.. ?

புதுடில்லி: ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டிலும் வெற்றிப்பெற்றும் எம்.பி.,யாக தேர்வான நிலையில், ஏதேனும் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரேபரேலி, வயநாடு தொகுதி மக்களை சந்தித்து தன்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறிவிட்டு, 'இவற்றில் எதை விடுவது எனத் தெரியவில்லை' என ராகுல், வெளிப்படையாகவே கூறியிருந்தார்.இந்த நிலையில், வயநாடு தொகுதி மூலம் தேர்வான எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன், ''தேசத்தை வழிநடத்த வேண்டிய இடத்தில் ராகுல் இருக்கிறார். அதை புரிந்துகொண்டு ராகுலுக்கு கேரள மக்கள் வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்க வேண்டும்'' என சூசகமாக தெரிவித்தார்.

கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் நின்ற ராகுல், வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றிப்பெற்று எம்.பி., ஆனார். ஆனால் தற்போது ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் வென்று, வயநாடு தொகுதியை கைகழுவுகிறார். வயநாட்டில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து