முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

குவைத்தின் தெற்குபகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரண்டு தமிழர்களும் பலியானதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. அதன்பின்னர் மேலும் ஒரு தமிழர் பலியாகியிருக்கும் தகவல் கிடைத்தது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு, குவைத் தீ விபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இறந்த தமிழர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடல்களும் இன்று கொச்சி கொண்டு வரப்படுகின்றன. கொச்சியிலிருந்து அமரர் ஊர்தி மூலம் தமிழர்கள் உடல்கள் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து