முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் அருணாசல் மாநில முதல்வர் உறுதி

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      இந்தியா
Pema-Khandu

Source: provided

இடாநகர்: பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் அளித்த பா.ஜ.க.வின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அருணாசலப் பிரதேச முதல்வராக பதவியேற்ற பெமா காண்டு வியாழக்கிழமை கூறியுள்ளார்.

இதுகுறித்து பெமா காண்டு கூறுகையில், “தொடர்ந்து மூன்றாவது முறையாக நான் முதல்வராக பதவியேற்ற பிறகு, வடகிழக்கில் மத்திய அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளால் பா.ஜ.க. மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியை நடத்துவோம். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்தின் முதல் 100 நாட்களுக்கான வளர்ச்சித் திட்ட பனிகளை உருவாக்கும். 26 பழங்குடிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட துணை பழங்குடியினங்களைக் கொண்ட அருணாசலப் பிரதேசம் இயற்கையில் தனித்துவமானது. நாங்கள் அனைவரின் நலனுக்காகவும், வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றவும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

மக்கள் அனைவரும் ‘டீம் அருணாசல்’ என்னும் குழுவில் அரசாங்கத்துடன் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி மாநிலத்தின் வளர்ச்சிக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறார். வரும் ஆண்டுகளில் அருணாசலப் பிரதேசம் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறும்.இந்த முறை அமைச்சரவையில் ஒரேயொரு பெண் மட்டும் இடம்பெற்றுள்ளார். அதுபோல 2029 தேர்தலில் போட்டியிட பெண்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து