முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் வளர்ச்சியில் பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கிறது : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      இந்தியா
jagdeepdhankhar-2023-05-05

Source: provided

ஜெய்ப்பூர் : நாட்டின் வளர்ச்சியில் எல்லை பாதுகாப்புப்படை முக்கிய பங்கு வகிக்கிறது என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப்படை மாநாட்டில்  துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது, 

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எல்லைப் பாதுகாப்புப் படையினர் தமது கடமைகளை மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.   கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு சில நிமிடங்கள் நிற்பது கூட கடினம். 

ஆனால் எப்போதுமே மிக கடினமான சூழ்நிலைகளில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கடமையாற்றுகின்றனர். அவர்களது பணிச் சூழல் சவாலானது. இமயமலையின் உயர்ந்த பகுதிகள், தார் பகுதியின் சுட்டெரிக்கும் பாலைவன வெயில், வடகிழக்குப் பகுதியின் அடர்ந்த காடுகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பணி ஈடு இணையற்றது.

எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் ஒவ்வொரு கணமும் கடமை என்ற தாரக மந்திரத்துடன் செயலாற்றுகின்றனர். பாதுகாப்பு படைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. நமது மகள்கள் தங்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.

பாதுகாப்புத்துறையில் நாட்டின் தற்சார்பு அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் சிறிய அளவிலான பொருட்கள் கூட இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இப்போது பெரிய அளவிலான பாதுகாப்புத் தளவாடங்களை நாமே உற்பத்தி செய்வதுடன், அவற்றை ஏற்றுமதியும் செய்கிறோம். நமது எல்லைப் பாதுகாப்புப் படை உலகிலேயே மிகப்பெரியது என்பது பெருமைக்குரிய விஷயம். 

ஊடுருவல், கடத்தல் போன்ற குற்றங்கள் மூலம் நாட்டை சீர்குலைக்கும் எதிரிகளின் முயற்சிகளை திறம்பட எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். இந்த சவால்களை மேலும் சமாளிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில், எல்லை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநர் டாக்டர் நிதின் அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து