Idhayam Matrimony

ஸ்வாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை காண எம்.பி ஸ்வாதி மாலிவால் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் தன்னை அடித்து, உதைத்ததாக ஸ்வாதி மாலிவால் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு எதிர்கட்சிகள், பாஜக என பல கட்சிகள் தங்கள் கண்டத்தை தெரிவித்தன. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அக்கட்சியின் அமைச்சர் அதிஷி மறுப்பும் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பிபவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கடந்த 18ஆம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் பிபவ் குமார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் திஹார் சிறையில் இருக்கும் பிபவ் குமாரின் 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் நேற்று காணொளி மூலம்  ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை ஒருநாள் நீட்டித்தது. இதனையடுத்து நேற்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜூன் 22 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து