முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண்: ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      தமிழகம்
Cort 2023 04 17

Source: provided

கோவை : பாதாள சாக்கடை குழியில் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காந்திபுரம் 100 அடி சாலை. இந்த சாலையின் இரு புறங்களிலும் வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே இரு புறங்களிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டு, பிறகு ஆங்காங்கே இருந்த பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே காணப்பட்டன.இது குறித்து பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாக கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அவ்வழியே நடந்த சென்ற பெண் ஒருவர், திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கால் எலும்பில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து