முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானை வீழ்த்தி கடைசி லீக் போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      விளையாட்டு
West-Indies 2024-05-09

Source: provided

செயிண்ட் லூசியா : வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரான் 53 பந்துகளில் 98 ரன்கள் குவித்து மே.இ.தீவுகள் அணி ஆப்கானை வீழ்த்த பெரிதும் உதவினார்.

40-வது லீக் ஆட்டம்...

டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற  40-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரான் 53 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார்.

114 ரன்களுக்கு... 

219-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்படித்த ஆப்கானிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சத்ரான் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.

புதிய சாதனை 

லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளது. அதாவது, வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்த போது பவர்பிளேவான முதல் ஆறு ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 92 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பவர்பிளேவான முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் (92 ரன் - 2024) படைத்துள்ளது. 

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணிகள் விவரம்: வெஸ்ட் இண்டீஸ் - 92 ரன் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024), நெதர்லாந்து - 91 ரன் (அயர்லாந்துக்கு எதிராக, 2014), இங்கிலாந்து - 89 ரன் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2016), தென் ஆப்பிரிக்கா - 83 ரன் (இங்கிலாந்துக்கு எதிராக, 2016), இந்தியா - 82 ரன் (ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து