முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை அரசு மருத்துவமனை மூடப்படாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

நாகை : நாகை அரசு மருத்துவமனை மூடப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாகை அரசு மருத்துவமனை மக்களின் பயன்பாட்டிற்காக தொடர்ந்து இயக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

கடந்த ஆட்சி காலத்தில் மூடி வைத்திருந்த புதுக்கோட்டை மருத்துவமனையை திறந்து வைத்திருக்கிறோம். கிருஷ்ணகிரி மருத்துவமனையை திறந்து வைத்திருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் நாகை அரசு மருத்துவமனை நிச்சயமாக மூடப்படாது. 

மக்களின் பயன்பாட்டிற்காக நாகை அரசு மருத்துவமனை தொடர்ந்து இயக்கும். நாகை அரசு மருத்துவமனை மூடப்படும் என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். இந்த மருத்துவமனையில் ஏற்கனவே இருக்கும் வசதிகளோடு, புதிதாக பல்வேறு நவீன வசதிகளையும் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து