Idhayam Matrimony

3-வது நாளாக சட்டசபை நிகழ்வுகளை புறக்கணித்த அ.தி.மு.க.

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
EPS-1 2024-06-24

சென்னை, கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து இரு நாட்களாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் நேற்றும் சட்டசபை நிகழ்வுகை புறக்கணித்தனர்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ம் தேதி முதல் நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், இரு நாட்களாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.   

இந்த நிலையில், சட்டசபையின் நேற்றைய கூட்டத்தை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. விஷ சாராய விவகாரம் தொடர்பாக நேற்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக புறக்கணித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த சூழலில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் நேற்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்றன. கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். கேள்விநேரம் முடிந்ததும் உயர் கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, பள்ளிக்கல்வித்துறை ஆகிய மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து