முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலத்திட்ட உதவிகள் வழங்கிய நடிகர் சவுந்தரராஜா

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      சினிமா
Soundararaja 2024-06-24

Source: provided

நடிகர் விஜய்யின் தனது 50-வது பிறந்தநாளையொட்டி. இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார். 

அப்போது பேசிய அவர், விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டர்களாக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெயின், ஃபிளைட் பிளைட்னு 2026-க்கு வந்துட்டே இருக்காங்க. நான் மிகைப்படுத்தி பேசல, இந்த உற்சாகம்தான் பலருக்கு பயத்தை உண்டாக்கும். அந்த உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும். 

நம்ம அண்ணன் தளபதி விஜய், இன்னைக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒருத்தர், சினிமா வேண்டாம்னு, நான் சம்பாதிச்ச பணம், வெற்றி, புகழ், வாழும் வாழ்க்கைக்கு இந்த மக்கள் தான் காரணம். அந்த மக்கள், இந்த மண்ணிற்காக வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வர பேராசை தான் காரணம். அந்த பேராசை, ஒவ்வொருத்தர் குடும்ப ரேஷன் கார்டில் உறுப்பினர் ஆவதுதான் அந்த ஆசை. 

விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா, அவருக்கு பேசவே தெரியாதுனு நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க. நான் அவங்களுக்கு பதில் கொடுக்கவே இல்லை. இப்போ சொல்றேன், மௌனத்திற்கு இருக்கும் சக்தி மிகவும் பெரியது. விஜய் மிகவும் சைலண்ட் ஆன நபர். அந்த சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு. அந்த வைலன்ஸ்-க்கு எதிராக மட்டும் தான் வெளியே வரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து