முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷ சாராய விவகாரம்: மெத்தனால் வேட்டை தீவிரம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
Kallakurichi 2024-06-24

கள்ளக்குறிச்சி, விஷ சாராய விவகாரத்தை தொடர்ந்து மெத்தனால் வேட்டையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடர்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து மெத்தனால் வேட்டை வேகமெடுத்து வருகிறது. மெத்தனால் பதுக்கல்காரர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். கருணாபுரத்தில் பலர் உயிரிழந்ததும், பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை உடனடியாக அழித்ததாக சாராய வியாபாரி கண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக கண்ணன் கூறும்போது, கேன்களில் இருந்த 100 லிட்டர் மெத்தனாலை ஆற்றில் கொட்டியதாகதெரிவித்துள்ளார். மேலும், மெத்தனால் கேன்கள் போலீசாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக மெத்தனால் கேன்களை தீயிட்டு எரித்துள்ளார். அப்போது, அந்த கேன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும் அதிலிருந்து உயிர்தப்பியதாகவும் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து