Idhayam Matrimony

என்.டி.ஏ. அரசின் 15 நாள் ஆட்சியில் 10 பிரச்சினைகள்: பட்டியலிட்ட ராகுல் காந்தி

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      இந்தியா      அரசியல்
Rahul-Gandhi-2023-04-13

புதுடெல்லி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்த முதல் 15 நாள்களில் 10 பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பட்டியலிட்டுள்ளார். மேலும், பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடியை தப்பிக்க விடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாள்கள்: 1. பயங்கர ரயில் விபத்து, 2. காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள், 3. ரயில்களில் பயணிகள் சந்திக்கும் அவல நிலை, 4. நீட் தேர்வு முறைகேடு, 5. நீட் முதுநிலை தேர்வு ரத்து, 6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு, 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, சுங்கக் கட்டணம் உயர்வு, 8. காடுகளில் தீ, 9. தண்ணீர் பற்றக்குறை, 10. முன்னெச்சரிக்கை இல்லாததால் வெப்ப அலை உயிரிழப்புகள்.

நரேந்திர மோடி தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்.அரசியல் சாசனத்தின் மீது மோடி மற்றும் அவரது அரசாங்கம் நடத்தும் தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பலமான எதிர்க்கட்சியாக அழுத்தம் கொடுப்பதை தொடர்ந்து செய்வோம். மக்களின் குரலாக இருப்போம். பிரச்னைகளுக்கு பொறுப்பேற்காமல் பிரதமரை தப்பிக்க அனுமதிக்க மாட்டோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து